Enable Javscript for better performance
தடையை மீறி இந்து முன்னணி கொடியேற்று விழா: ஆரணி பகுதியில் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    தடையை மீறி இந்து முன்னணி கொடியேற்று விழா: ஆரணி பகுதியில் பரபரப்பு

    By ஆரணி  |   Published on : 11th August 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி பகுதியில் புதன்கிழமை இந்து முன்னணி சார்பில் 7 இடங்களில் தடையை மீறி கொடியேற்று விழா நடத்தப்பட்டது.

    இதனை முன்னிட்டு, ஆரணி களத்துமேட்டுத் தெரு, சூரியகுளம் அருகில், குங்குலியர் தெரு, பெரியார் நகர், பெரியகடை வீதி, கோட்டை வடக்கு தெரு, குண்ணத்தூர் ஆகிய இடங்களில் வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் கொடியேற்றினார்.

    கோட்டத் தலைவர் கோ.மகேஷ், நகர, ஒன்றியத் தலைவர் தாமோதரன், நகரச் செயலர் நாகராஜன், பாலா, சத்தியமூர்த்தி, ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தடையை மீறி கொடியேற்று விழா: ஆரணி பகுதியில் புதன்கிழமை 7 இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது குறித்து போலீஸாரிடம் 5 நாள்களுக்கு முன்பே நகர, ஒன்றியத் தலைவர் தாமோதரன் தகவல் தெரிவித்து அனுமதி கேட்டாராம்.

    அதற்கு, செவ்வாய்கிழமை இரவு திடீரென போலீஸார் அனுமதி மறுத்ததுடன், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கொடியேற்றலாம் என்று கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில், தடையை மீறி புதன்கிழமை ஆரணி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கொடியேற்று விழா நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai