Enable Javscript for better performance
தமாகா ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் என்.கே.மணிவர்மா தலைமை வகித்தார். மேலிடப் பார்வையாளர் ஏ.எஸ்.முனவர் பாஷா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். இதில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    நகரத் தலைவர் பி.ஏ.முத்தலீப், ராயர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, நகர, வட்டார, ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai