Enable Javscript for better performance
பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

    By ஆரணி  |   Published on : 11th August 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாலை ஆரணி நகராட்சி பொது சுகாதாரம், மக்கள் நல்வாழ்வுத் துறை, குடும்ப நலத் துறை இணைத்து நடத்திய தேசிய குடற்புழு நீக்க நாள் விழாவை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பழனி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆரணி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 28,376 நபர்களுக்கும், எஸ்.வி.நகரம் வட்டார மருத்துவமனைக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 28,376 நபர்களுக்கும், தச்சூர் வட்டார மருத்துவமனைக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 30,719 நபர்களுக்கும் என மொத்தம் 79,986 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியரும் (பொறுப்பு), மாவட்ட வருவாய் அலுவலருமான பழனி, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினார்.

    நிகழ்ச்சியில் செய்யாறு சுகாதார மாவட்ட இணை இயக்குநர் கோவிந்தன், எஸ்.வி.நகரம் வட்டார மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுதா, ஆரணி நகராட்சி மருத்துவ அலுவலர் கெளதம், நகராட்சித் தலைவர் ஆனந்தகுமாரி கருணாகரன், சுகாதார அலுவலர் லட்சுமணன், பள்ளித் தலைமை ஆசிரியர் சுடர்கொடி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரும், நகராட்சி உறுப்பினருமான பி.சரவணன், நகராட்சி உறுப்பினர்கள் எஸ்.ஜோதிலிங்கம், ரவி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai