Enable Javscript for better performance
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக விவசாயி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

    செய்யாறை அடுத்த மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சுந்தரம் (24) அந்தப் பெண்ணுக்கு பாலியியல் தொல்லை கொடுத்தாராம். உடனடியாக அந்தப் பெண் கூச்சலிடவே அங்கிருந்து சுந்தரம் தப்பியோடிவிட்டாராம். இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai