போட்டியில் வென்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசு
By திருவண்ணாமலை | Published on : 11th August 2016 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாவட்ட காந்தி பேரவை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டியில் வென்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட காந்தி பேரவை சார்பில், ஒவ்வொரு மாதமும் பள்ளி மாணவ - மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 32-ஆவது மாத காந்தி பேரவை நிகழ்ச்சியும், போட்டிகளில் வென்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவும் புதன்கிழமை நடைபெற்றன. திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு காந்தி பேரவை நிறுவனத் தலைவர் பி.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். கவிஞர் சண்முகம், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காந்திய வழியில் கர்மவீரர் காமராஜர், விண்வெளி நாயகன் அப்துல் கலாம் என்ற தலைப்புகளில் கவிஞர் லதா பிரபுலிங்கம் பேசினார். சேஷாத்திரி ஆஸ்ரமத் தலைவர் ஆர்.முத்துக்குமாரசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஓம்சக்தி மெட்ரிக் பள்ளியில் காந்தி பேரவை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார்.
விழாவில், காந்தி பேரவை நிர்வாகிகள் தேவதாஸ், லாவண்யா, தமிழ்ச்செல்வி, மொய்தீன், சுஜாதா, வாசுதேவன், கோவிந்தசாமி, கலா விஜயகுமார் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.