Enable Javscript for better performance
மனுநீதி நாள் முகாம்: 196 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    மனுநீதி நாள் முகாம்: 196 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

    By ஜங்ஷன் - intro  |   Published on : 11th August 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 196 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமுக்கு செய்யாறு சார் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்து, 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 6 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 42 பேருக்கு முதியோர் உதவித்தொகை உள்பட மொத்தம் 88 பேருக்கு நலத்திட்ட உதவிகளைப் பேசினார்.

    விழாவில் வந்தவாசி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நரேந்திரன், துணை வட்டாட்சியர் திருமலை, மருதாடு ஊராட்சி மன்றத் தலைவர் எம்.டி.ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சந்திரம்பாடி: சேத்துப்பட்டு வட்டம், சந்திரம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தண்டாயுதபாணி தலைமை வகித்து, 32 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    வட்டாட்சியர் சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், மண்டல துணை வட்டாட்சியர் மனோகரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் பென்சமின் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    மேலப்புஞ்சை: புதுப்பாளையம் ஒன்றியம், மேலப்புஞ்சை, அன்னந்தல், வாசுதேவன்பட்டு ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் மேலப்புஞ்சை கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு செங்கம் வட்டாட்சியர் காமராஜ் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பழநி, துணை வட்டாட்சியர் மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரேணுகா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் சுப்பிரமணி கலந்துகொண்டு, 76 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

    உடன், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிஎழிலன், முருகன், வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் (வாசுதேவன்பட்டு) மேகநாதன்,(மேலப்புஞ்சை) லட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவழகன், விஜயகுமார், முகுந்தன், கிருஷ்ணன், குணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai