Enable Javscript for better performance
மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

    By திருவண்ணாமலை  |   Published on : 11th August 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மின்வாரிய ஊழியர்கள் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி, அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில், தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனமும் பங்கேற்கிறது. இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கியும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை நிர்வாகிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை, வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் பி.சம்பத் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் எஸ்.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் மகேஸ்வரி, மாவட்ட துணைச் செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆரணி கோட்டச் செயலர் டி.அன்பு உதயன் வரவேற்றார். சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் கே.சம்பத், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பகுதிநேர பணியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    மஸ்தூர்களுக்கு கள உதவியாளர்களாகப் பதவி உயர்வு அளிக்க வேண்டும். 2015 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அளிக்க வேண்டிய புதிய ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில், சம்மேளனத்தின் கோட்டச் செயலர்கள் ரவிச்சந்திரன் (செங்கம்), சுப்பிரமணியன் (போளூர்), முருகன் (வந்தவாசி), மணிகண்டன் (சேத்துப்பட்டு), நெடுமாறன் (திருவண்ணாமலை கிழக்கு) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai