Enable Javscript for better performance
வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் புதன்கிழமை வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வழக்குரைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பார் அசோசியஷேன், லாயர்ஸ் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai