Enable Javscript for better performance
10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி: மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி: மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு

    By செங்கம்  |   Published on : 11th August 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் நட்டு, பராமரிப்பதற்காக அம்மாபாளையம் கிராமத்தில் நடைபெற்று வரும் 10 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் காளிதாசன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    இதற்காக மேல்முடியனூர் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையம் கிராமத்தில் நவீன முறையில் 10 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் காளிதாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மரக்கன்றுகளை நடும் முறைகள், அதனை வளர்க்கும் முறைகள் குறித்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோரிடம் கேட்டறிந்தார்.

    உடன், புதுப்பாளையம் ஒன்றிய ஆணையாளர்கள் மணிஎழிலன், முருகன், செங்கம் ஒன்றிய ஆணையாளர்கள் கருணாகரன், சக்திவேல், மேல்முடியனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, ஊராட்சிச் செயலர் சவுந்தர் உள்பட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai