Enable Javscript for better performance
அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம், சுபான்ராவ்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் ஒன்றிய அதிமுக சார்பில் சனிக்கிழமை இரவு உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்த செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், ஆரணி தொகுதியைச் சேர்ந்த எனக்கு அமைச்சர் பதவி அளித்து நம் தொகுதிக்கு முதல்வர் பெருமை சேர்த்துள்ளார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்தவித பாகுபாடின்றி கட்சியினர் செயல்பட்டு அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.
    இதில், மாவட்டச் செயலரும், செய்யாறு எம்எல்ஏவுமான தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், ஆரணி எம்.பி செஞ்சி வே.ஏழுமலை, கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், போளூர் சி.ஏழுமலை, பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை நிர்வாகி பி.ஜி.பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai