Enable Javscript for better performance
கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு கிரிதரன்பேட்டை கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    செய்யாறு பங்களா தெருவில் உள்ள கன்னியம்மன் கோயிலில் 43-ஆவது ஆண்டு ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கன்னியம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 9.30 மணிக்கு ஊரணி பொங்கலும், பிற்பகல் 12 மணிக்கு கரகம் புறப்பாடும், 1.30 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3 மணிக்கு உறியடி நிகழ்ச்சியும், 4 மணிக்கு காவடி ஏந்தி பழம் குத்தி விஷேச வேடங்களுடன் ஊர்வலமும் நடைபெற்றன.
    விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai