Enable Javscript for better performance
நிரந்தர கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர்களை நியமிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நிரந்தர கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர்களை நியமிக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 15th August 2016 11:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் நிரந்தர கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஜி.சங்கர் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி எஸ்.கஜலட்சுமி, ஏ.ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் சி.அருணகிரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில், கொசுப்புழு உற்பத்தி பரிசோதகர் என்ற பெயரை களப்பணியாளர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்பவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மஸ்தூர் பணியிடங்கள் காலாவதியானதால், நிரந்தர கொசுப்புழு உற்பத்திப் பரிசோதகர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், தமிழக சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாநில இணைச்செயலர் பி.கே.ஹரிகிருஷ்ணன், தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.குமரவேல், தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் கே.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai