Enable Javscript for better performance
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 15th August 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை, அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் எம்.கணபதி தலைமை வகித்தார். நகர பொதுச்செயலர் கே.வெங்கடேசன், நகரத் தலைவர்கள் ஆர்.கார்த்திக், டி.அருணாசலம், ஆர்.வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இந்து முன்னணியின் மாவட்டத் தலைவரும், வழக்குரைஞருமான டி.எஸ்.சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரை இழிவுபடுத்தும் பிரிவினைவாத சக்திகளை கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனே அமல்படுத்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதில், மாவட்டச் செயலர் ஏ.எம்.செந்தில், நகரப் பொருளாளர் பி.சந்தோஷ், ஒன்றியத் தலைவர்கள் எஸ்.சிவா, ஆர்.காண்டீபன், வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai