Enable Javscript for better performance
மண்டல சதுரங்கப் போட்டி: திருவண்ணாமலை கல்லூரி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மண்டல சதுரங்கப் போட்டி: திருவண்ணாமலை கல்லூரி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 15th August 2016 11:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி இரண்டாமிடம் பிடித்துள்ளது.

    வேலூர் அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 6-ஆவது மண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், 18 ஆண்கள் அணிகள் பங்கேற்று விளையாடின.

    எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி, வேலூர் குளோபல் பொறியியல் கல்லூரி, ஆரணி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகியவற்றுடன் விளையாடிய திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அணி, மொத்தம் 11 ஆட்ட புள்ளிகளை எடுத்து இரண்டாம் இடம் பிடித்தது.

    போட்டியில் வென்ற வீரர்களை கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், முதல்வர் ஜி.மோகன்குமார், இயக்குநர் வி.ராமநாதன், கல்லூரி பதிவாளர் ர.சத்தியசீலன், செயலர் எம்.புர்க்கிந்த்ராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai