Enable Javscript for better performance
முதல்வருக்கு மாவட்ட ஊராட்சிக் குழு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக முதல்வராக 6-ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ள
    ஜெயலலிதாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழுவில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஓரிரு மாதங்களில் முடிவடைகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை, காந்தி நகரில் இயங்கி வரும் மாவட்ட ஊராட்சிக் குழுவின் கடைசிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் திட்டக்குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிச் செயலர் கே.சாந்தா வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உள்ளிட்ட அனைவரும் வரவேற்று, நினைவுப் பரிசு வழங்கினர். மேலும், அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியா கோயில் பிரசாதம் வழங்கி வரவேற்றார்.
    தொடர்ந்து நடைபெற்ற ஊராட்சிக்குழுக் கூட்டத்தில், தமிழக முதல்வராக 6-ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    இதில், எம்.பிக்கள்
    ஆர்.வனரோஜா (திருவண்ணாமலை), செஞ்சி சேவல் ஏழுமலை (ஆரணி), எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் எஸ்.திருமுருகன் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai