Enable Javscript for better performance
ஆரணியிலிருந்து சென்னை தி.நகருக்கு அரசுப் பேருந்து சேவை: அமைச்சர் தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியிலிருந்து சென்னை தி.நகருக்கு அரசுப் பேருந்து சேவை: அமைச்சர் தொடங்கி வைத்தார்

    By DIN  |   Published on : 21st August 2016 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியிலிருந்து சென்னை தி.நகருக்கு புதிய அரசுப் பேருந்தை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

    ஆரணியிலிருந்து நேரடியாக சென்னை தி.நகருக்கு செல்வதற்கு இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என ஆரணி அனைத்து வியாபாரிகள் சங்கம், மளிகை வியாபாரிகள் சங்கம், பட்டு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஆரணி - சென்னை தி.நகர் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்தை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பழனி, அதிமுக மாவட்டச் செயலர் தூசி மோகன் எம்எல்ஏ, நகரச் செயலர் அசோக்குமார், நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி, ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், போக்குவரத்துத் துறை பொதுமேலாளர் நடராஜ், கிளை மேலாளர் வெங்கடேசன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உதயசங்கர், அருவாவேலு, பாலன், அரிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai