Enable Javscript for better performance
கீழ்க்கொடுங்காலூரில் சிறப்பு மருத்துவ முகாம்: 1,670 பேருக்கு சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    கீழ்க்கொடுங்காலூரில் சிறப்பு மருத்துவ முகாம்: 1,670 பேருக்கு சிகிச்சை

    By DIN  |   Published on : 21st August 2016 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியை அடுத்த வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் கீழ்க்கொடுங்காலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

    முகாமுக்கு வழூர் வட்டார மருத்துவ அலுவலர் ஜி.திருமூர்த்தி தலைமை வகித்தார். கீழ்க்கொடுங்காலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஆர்.பி.விஜயா பழனி வரவேற்றார்.

    வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் முகாமை தொடங்கி வைத்தார். மேலும், 3 பேருக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், 3 பேருக்கு மகப்பேறு நிதியுதவி ஆகியவற்றை அவர் வழங்கினார்.

    முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், இதய நோய், மகப்பேறு, காது, மூக்கு, தொண்டை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மொத்தம் 1,670 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.தரணிவேந்தன், எஸ்.தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் லீலாவினோதன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai