Enable Javscript for better performance
தொழில் முனைவோருக்கு இந்தியன் வங்கி ரூ.28 கோடி கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் வங்கியின் 110-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோருக்கு ரூ.28 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

    இதற்கான நிகழ்ச்சி செங்கத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மண்டல மேலாளர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.மகேந்திரன், முதுநிலை மேலாளர் ஆர்.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார்.

    இதில், சென்னை தலைமை அலுவலக பொது மேலாளர் மணிமாறன் கலந்துகொண்டு, வேளாண் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர், மகளிர் குழுக்களுக்கு ரூ.28 கோடியே 58 லட்சம் கடனுதவியை வழங்கிப் பேசினார். மேலும், வங்கியில் கடன் பெற்று தவணை தவறாமல் கட்டிய மகளிர் சுய உதவிக்குழுக்களை பாராட்டி கேடையம் வழங்கினார்.

    இந்திய வங்கி கிளை மேலாளர்கள் தானிப்பாடி ராஜபாப், வந்தவாசி கிரண்குமார், மாமண்டூர் சுப்பிரமணியன், தேவிகாபுரம் ராம்ஜிகுமார், களம்பூர் வெஸ்லி, கரியமங்கலம் முத்துகுமார், இறையூர் ஆஞ்சுஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai