Enable Javscript for better performance
உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பதற்கான தேர்வு: மேல்பென்னாத்தூர் மாணவி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பதற்கான தேர்வு: மேல்பென்னாத்தூர் மாணவி முதலிடம்

    By DIN  |   Published on : 22nd August 2016 10:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் மேல்பென்னாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்தார்.

    செங்கம் ஒன்றிய அளவில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உண்டு உறைவிடப்பள்ளியில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மேல்பென்னாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி கலைச்செல்வி முதலிடம் பிடித்தார்.

    இந்த மாணவி அரசு சலுகையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செங்கம் மகரிஷி பள்ளியில் படிக்க மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பழனி உத்தரவிட்டார்.

    அதன்படி, மேல்பென்னாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்தி மகரிஷி பள்ளித் தலைவர் மனோகரனிடம் இந்த தகவலை தெரிவித்து, மாணவி கலைச்செல்வியை மகரிஷி பள்ளியில் செங்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் லோகநாயகி முன்னிலையில் அண்மையில் சேர்த்தார்.

    உடன், மாணவியின் பெற்றோர் வேலு, சின்னப்பாப்பா, ஆசிரியர் நாராயணன் ஆகியோர் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai