Enable Javscript for better performance
மண்டல கூடைப்பந்து: திருவண்ணாமலை கல்லூரி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்துப் போட்டியில், திருவண்ணாமலை குமரன் தொழில்நுட்பக் கல்லூரி சிறப்பிடம் பிடித்துள்ளது.

    ஒசூர் அதியமான் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலூர் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 14 அணிகள் கலந்துகொண்டன.

    இறுதிப் போட்டியில் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் தொழில்நுட்பக் கல்லூரி அணியுடன் மோதிய திருவண்ணாமலை குமரன் தொழில்நுட்பக் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. மேலும், டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் கலந்துகொள்ள திருவண்ணாமலை குமரன் தொழில்நுட்பக் கல்லூரி அணி தகுதி பெற்றுள்ளது.

    வெற்றி பெற்ற மாணவர்கள் டி.முகிலன், எஸ்.பைசர், ஆர்.கோபிநாத், ஆர்.அஜித்குமார், கே.சுபாஷ், ஜி.சதீஷ்குமார், ஆர்.தினகரன், வி.பரணிதரன் ஆகியோரை கல்லூரி இயக்குநர் பொன்.முத்து, முதல்வர் ஜி.முரளி, உடற்கல்வி இயக்குநர் என்.சவுந்தரராஜன் ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai