Enable Javscript for better performance
ரயில் மறியல்: மாற்றுத் திறனாளிகள் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரயில் மறியல்: மாற்றுத் திறனாளிகள் கைது

    By DIN  |   Published on : 03rd December 2016 06:00 AM  |   அ+அ அ-   |    |  

    திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சி.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். சங்க நிர்வாகி சி.ஏ.செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    காலை 11.30 மணிக்கு மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ரயிலை மாற்றுத் திறனாளிகள் மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கிடப்பில் போடப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும்.
    சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த சட்ட மசோதா குறித்து அளித்த ஆலோசனைகள் மீது மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai