சுடச்சுட

  

  மண்டல தடகளப் போட்டி: செய்யாறு கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

  By DIN  |   Published on : 31st December 2016 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மண்டல அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனர்.
  வேலூர் மண்டல அளவிலான 14-ஆவது ஆண்டு தடகளப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 920 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
  இதில், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த முதுகலை விலங்கியியல் முதலாமாண்டு மாணவர் டி.பாபு, கோல் ஊன்றித் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றார்.
  இளங்கலை முதலாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி எஸ்.காமாட்சி 1,500 மீட்டர் நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடமும், முதுகலை வணிகவியல் இரண்டாமாண்டு மாணவர் இ.ஜெகதீசன் கிரிக்கெட் போட்டியில் பல்கலைக்கழக அளவிலும் வெற்றி பெற்றனர்.
  வெற்றி பெற்ற மாணவர்களை
  கல்லூரி முதல்வர் ரா.கீதாராணி, வணிகவியல் துறைத் தலைவர் ஆ.மூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் க.வெங்கடேசன் ஆகியோர் பாராட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai