Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    செய்யாறை அடுத்த கீழ்மட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (55). இவர், செங்கல்சூளையில் வேலை செய்வதற்காக கடந்த 15-ஆம் தேதி வீட்டில் இருந்து நடந்து சென்றுள்ளார். கீழ்மட்டை ஜெயபால் நிலத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதாகத் தெரிகிறது.

    இதில் பலத்த காயமடைந்த ராதா உடனடியாக செய்யாறு அரசு மருததுவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் அனக்காவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai