Enable Javscript for better performance
அச்சுதானந்த சுவாமிகளின் குருபூஜை, சிலை திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    போளூரில் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகளின் 114-வது குருபூஜை விழா மற்றும் சுவாமிகளின் பஞ்சலோக சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுது.
    போளூரில் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகளின் மடம் உள்ளது. இந்த மடத்தின் நிர்வாகிகளான போளூர் பலிஜநாயுடு நலச்சங்கத்தினர் மற்றும் இளைஞரணி சார்பில் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகளின் 3 அடி உயர பஞ்சலோக சிலை மடத்தில் பிரதிஷ்டை செய்து திறப்பு விழா நடைபெற்றது. மேலும், ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகளின் 114-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பஜனை நடைபெற்றது.
    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் போளூர் பலிஜநாயுடு நலச்சங்கம் மற்றும் இளைஞரணியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai