Enable Javscript for better performance
டிச.20-ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் டிசம்பர் 20-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
    இதில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் அலுவலகத்தின் ஓய்வூதிய இயக்குநர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடை, இதர ஓய்வூதியப் பலன்களுக்கான உத்தரவுகள் கிடைக்கப்பெறாதவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், இது குறித்த தங்களது மனுக்களையும் அளிக்கலாம். எனவே, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai