Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கழகத்தின் மாவட்டத் தலைவர் ஏ.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் எம்.ஜெயக்குமார், மாவட்ட மகளிரணிச் செயலர்கள் ஜி.பாஸ்கரிபாய், பி.புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ஏ.ஜி.அயூப்கான் வரவேற்றார். கழகத்தின் மாநில மகளிரணிச் செயலர் எம்.சிநேகலதா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
    ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2004 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணிவரன்முறை செய்ய வேண்டும். முதல் தகுதித் தேர்வு நடத்திய நாளுக்கு முன்பு வரை பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.ஜி.முருகன், எஸ்.தயாளன், இணைச் செயலர்கள் ஆர்.ஞானசுந்தரம், அரங்க.திருமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சம்பத் மற்றும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai