Enable Javscript for better performance
மழை வேண்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம்- Dinamani

சுடச்சுட

    

    பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு வரதராஜப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
     இதை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து, உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில், மழை வேண்டியும், பயிர்கள் செழித்து வளரவும், உலக நன்மைக்காகவும், திருமணத்தடை மற்றும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் யாக பூஜை நடைபெற்றது.  இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai