Enable Javscript for better performance
மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.398.77 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்த- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.398.77 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்

    By DIN  |   Published on : 28th November 2016 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் இதுவரை 99,775 பயனாளிகளுக்கு ரூ.398.77 கோடியில் பல்வேறு கடன்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
    செய்யாறில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செய்யாறு கிளையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் டி.அமலதாஸ் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் வரவேற்றார்.
    இதில் சிறப்பு விருந்தனாக கலந்துகொண்டதுடன், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியது:
    விவசாயிகளின் மனம் மகிழ்ந்திடும் வகையில், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களுக்கு தற்போது எந்தவித இடையூறுமின்றி வேளாண் கடன் கிடைத்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
    2016 - 17ஆம் ஆண்டில் 25.11.16 வரை கூட்டுறவுத் துறை மூலம் 35,764 பயனாளிகளுக்கு ரூ.133.34 கோடிக்கு பயிர்க்கடன், 129 பயனாளிகளுக்கு ரூ.74.75 லட்சம் வேளாண்  மத்திய கால கடன், 60,936 பயனாளிகளுக்கு ரூ.219.95 கோடி நகைக்கடன், 1,207 பயனாளிகளுக்கு ரூ.5.81 கோடி தானிய ஈட்டுக்கடன், 1,739 பயனாளிகளுக்கு ரூ.38.93 கோடிக்கு மகளிர் சுயஉதவிக்குழு கடன் என 99,775 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.398.77 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
    இன்று இங்கு வழங்கப்படுகிற கடன் உதவித் தொகையை விவசாயிகள் தங்களின் வேளாண்மை வளர்ச்சிக்கு பயன்படுத்தி, குடும்பத்தை வளப்படுத்திட வேண்டும் என்றார்.
    18.40 லட்சம் பயிர்க்கடன்: நிகழ்ச்சியின்போது, ஆரணி, வாழ்குடை, திருவத்திபுரம், கொருக்கை, அருகாவூர், தென்பூண்டிப்பட்டு, டிஎம்எஸ் மங்கலம், ஆலத்தூர், அனக்காவூர் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம விவசாயிகள் 67 பேருக்கு ரூ.18.40 லட்சம் மதிப்பில் பயிர்க்கடன் வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் அமுதா அருணாச்சலம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வே.குணசீலன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பாஸ்கர், அதிமுகவைச் சேர்ந்த மாணவரணி மகேந்திரன், கே.வி.வெங்கட்ராமன், தசரதன், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai