Enable Javscript for better performance
மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், மாநில வேளாண்மைத் துறை இயக்குநருமான வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.
    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், மாநில வேளாண்மைத் துறை இயக்குநருமான வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.
    முன்னதாக, வேளாண் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai