Enable Javscript for better performance
விஷப் பூச்சி கடித்து கட்டட மேஸ்திரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே விஷப் பூச்சி கடித்ததால் சிகிச்சைப் பெற்று வந்த கட்டட மேஸ்திரி உயிரிழந்தார்.
    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம், வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி குமார் (45). இவர், கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது, விஷப்பூச்சி அவரை கடித்ததாகத் தெரிகிறது. இதை அவர் பொருட்படுத்தாமல் விட்டுள்ளார்.
    24-ஆம் தேதி வேலைக்குச் சென்ற குமார், திடீரென மயங்கி விழுந்தாராம். இதைக் கவனித்த பொதுமக்கள் அவரை மீட்டு,
    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். இது குறித்து, மங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai