Enable Javscript for better performance
அரசு தொடக்கப் பள்ளியில் நவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த துளுவபுஷ்பகிரி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சரஸ்வதி பூஜை மற்றும் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    வெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த துளுவபுஷ்பகிரி கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நவராத்திரியையொட்டி, கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை சுவாமி உருவங்கள், களி மண்ணால் செய்யப்பட்ட சிலை ஆகியவை வைத்து சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது.
    இதனை முன்னிட்டு, பள்ளியில் வாழை மரங்கள், தோரணம் கட்டப்பட்டு, மாணவர்களின் நோட்டு, புத்தகங்களை வைத்து வழிபாடு நடத்தினர். விழாவில், பூஜைக்கு சிலைகளை களிமண்ணால் செய்து வைத்தற்காக 5-ஆம் வகுப்பு மாணவர்களை பாராட்டி சென்னையைச் சேர்ந்த பார்வதி என்கிற திரிபுரசுந்தரி அறக்கட்டளை சார்பில் முன்னாள் தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, பரிசு வழங்கினார். விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை து.மீனா தலைமை வகித்தார். ஆசிரியை ரா.மணிமேகலை மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai