Enable Javscript for better performance
கூட்ட நெரிசலால் பேருந்தில் இருந்து விழுந்து மாணவர் காயம்: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கூட்ட நெரிசலால் பேருந்தில் இருந்து விழுந்து மாணவர் காயம்: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு அரசுப் பேருந்தில் சென்ற மாணவர் கூட்ட நெரிசல் காரணமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    செங்கத்தை அடுத்த பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி மகன் குருபிரசாந்த் (14). திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். குருபிரசாந்த் தினமும் செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு நகரப் பேருந்தில் செல்வது வழக்கம்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இந்த அரசு நகரப் பேருந்தில் பின்னப்பக்கப் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த செய்த மாணவர் குருபிரசாந்த், கூட்ட நெரிசல் தாங்க முடியாமல் கண்ணக்குருக்கை பகுதியில் பேருந்தில் இருந்து கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு, அவசர ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    மறியல்: செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு காலை வேளையில் ஒரு அரசு நகரப் பேருந்து மட்டுமே செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தொடர் விபத்துகள் நிகழ்கிறது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதலாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை - செங்கம் நெடுஞ்சாலையில் கண்ணக்குருக்கை பகுதியில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த பாய்ச்சல் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தலிங்கம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்று மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai