Enable Javscript for better performance
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த சிறுமூர் சிறுபாத்தம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் பணம் மற்றும் தங்க நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
    சிறுமூரில் சிறுபாத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவு உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ.2 ஆயிரம் மற்றும் அம்மன் கழுத்திலிருந்த தங்க நகை, கண் மலர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
    இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அந்தப் பகுதி மக்கள், ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai