Enable Javscript for better performance
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஒன்றியத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
    திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இதற்கான விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட திமுக செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலர் த.ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், திருவண்ணாமலை ஒன்றியம், நல்லான்பிள்ளை பெற்றாள் ஊராட்சி, ந.பி.தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் ஆர்.ராமகிருஷ்ணன், கிளைக்கழக பிரதிநிதி எம்.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
    இவர்களை முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு, சால்வை அணிவித்து வரவேற்றார். இதில், திமுக அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம், ஒன்றிய நிர்வாகிகள் இரா.நாகசங்கர், க.கங்காதரன், கே.ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai