Enable Javscript for better performance
திருட்டுப்போன பாட்டில்களின் வரிசை எண்ணுடன் ஒத்துப்போனதால்: சித்தாத்தூர் டாஸ்மாக் கடையில் 609 மது பாட- Dinamani

சுடச்சுட

    

    திருட்டுப்போன பாட்டில்களின் வரிசை எண்ணுடன் ஒத்துப்போனதால்: சித்தாத்தூர் டாஸ்மாக் கடையில் 609 மது பாட்டில்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 08th October 2016 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறை அடுத்த செங்காடு அரசு மதுபானக் கடையில் திருடப்பட்ட மது பாட்டில்களின் வரிசை எண்ணுடன் ஒத்துப்போனதால், சித்தாத்தூர் அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்) விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 627 மது பாட்டில்களை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    செங்காடு கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் கடந்த 5-ஆம் தேதி திருடிச் சென்றனர். இந்தத் திருட்டு குறித்து விற்பனையாளர் அருள் அளித்த புகாரின்பேரில் அனக்காவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
    மேலும், செங்காடு அரசு மதுபானக் கடையில் திருடுப்போன மது பாட்டில்கள் வேறு பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அல்லது வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து அனக்காவூர் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    இந்நிலையில், செய்யாறை அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீஸார் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, செங்காடு அரசு மதுபானக் கடையில் திருடுப்போன மது பாட்டில்களில் இருந்த வரிசை எண்ணும், சித்தாத்தூர் அரசு மதுபானக் கடையில் இருந்த மது பாட்டில்களின் வரிசை எண்ணும் ஒன்றாக இருந்தனவாம்.
    அதன்பேரில், செய்யாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் திவ்யா, மது விலக்கு காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். மேலும், கடை மேற்பார்வையாளர் வெங்கடேசன், விற்பனையாளர் பழனி ஆகியோரிடம் விசாரணை செய்ததில், அவர்கள் கடையில் வைத்திருந்த மது பாட்டில்களுக்கான ரசீது தங்களிடம் இல்லை என்றும், சேமிப்புக்கிடங்கில் இருந்து லாரியில் கொண்டு வந்து ஊழியர்கள் மது பாட்டில்களை இறக்கியபோது அதற்கான ரசீது கொடுக்கவில்லை என்றும் கூறினராம். இதன் காரணமாக சந்தேகத்தின்பேரில், அந்தக் கடையில் இருந்த 627 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai