Enable Javscript for better performance
நெருப்பு சுற்றும் நிகழ்ச்சி: வட்டாட்சியர் கட்டுப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    நெருப்பு சுற்றும் நிகழ்ச்சி: வட்டாட்சியர் கட்டுப்பாடு

    By DIN  |   Published on : 08th October 2016 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொஹரம் பண்டிகை நெருப்பு சுற்றுவது குறித்து செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு வட்டாட்சியர் காமராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் செங்கம் காவல் துணைக் கணாகாணிப்பாளர் ஷாஜித்தா, ஆய்வாளர் பழநி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    அப்போது, வழக்கமாக பண்டிகையின்போது நெருப்பு சுற்றும் பகுதியில் மட்டும் சுற்றலாம் என்றும், புதிதாக எந்தப் பகுதியிலும் நெருப்பு சுற்றக்கூடாது என்றும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மேலும், துக்காப்பேட்டை மசூதியில் இருந்து ஊர்வலமாகச் செல்லும் நெருப்பு சுற்றுபவர்கள் துக்காப்பேட்டை மின்சார வாரிய அலுவலக சாலை சந்திப்பில் நிறுத்தி விட வேண்டும். பஜார் வீதியில் கடைகள் அதிகம் இருப்பதால், அந்தப் பகுதியில் ஊர்வலமாகச் சென்று போளூர் சாலை மேம்பாலத்தில் இருந்து மீண்டும் நெருப்பு சுற்ற ஆரம்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பின்னர், மொஹரம் பண்டிகை நடத்தும் குழுவினர் மற்றும் செங்கம் நகரில் உள்ள மசூதி நிர்வாகிகள், நெருப்பு சுற்றும்போது போக்குவரத்தை போலீஸார் சீர்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதை காவல் துறையினர் சரிசெய்து கொள்வார்கள் என காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜித்தா தெரிவித்தார்.
    உடன், வருவாய் ஆய்வாளர்கள் துரைராஜ், ஜெயபாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai