Enable Javscript for better performance
பூட்டிய வீட்டில் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை, பார்வதி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் அருணாச்சலம். இவருக்கு மனைவி முனீஸ்வரி, மகள் மீனா ஆகியோர் உள்ளனர். மீனா, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
    ஆசிரியை வேலைக்கு சென்றுவர ஏதுவாக செஞ்சியில் தாய் முனீஸ்வரியுடன், மீனா தங்கியுள்ளார். அருணாச்சலம் மட்டும் திருவண்ணாமலையில் தங்கியுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு செஞ்சியில் உள்ள மனைவி, மகளைப் பார்க்க அருணாச்சலம் அங்கு சென்றிருந்தார்.
    இதையடுத்து, அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், ஒரு ஜோடி கொலுசு ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai