Enable Javscript for better performance
மகளிர் கல்லூரியில் ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இந்தக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளம் செஞ்சிலுவை சங்கம், இளம் அரிமா சங்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது.
    கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் முகாமை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் சூசன்வில்சன், வி.ஹரீஸ், வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் திருமூர்த்தி, செலஸ்டி, ரேவதிதேவி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாணவிகளிடமிருந்து 63 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனர்.
    முகாமில் கல்லூரி முதல்வர் எம்.ஓ.எச்.முகமதுயாகூப், செயலர் எம்.ரமணன், கல்லூரி செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் எ.கலைவாணி, இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ரமாபிரியா, இளம் அரிமா சங்க ஆலோசகர் துர்காதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai