Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 08th October 2016 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மெய்யூர் ஸ்கை மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
    மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் திருவண்ணாமலையை அடுத்த மெய்யூர் ஸ்கை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், ஸ்கை பள்ளி மாணவர்கள் அஜித், ரிஷி ஆகியோர் ஜூனியர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
    மேலும், சீனியர் இரட்டையர் பிரிவில் மோனிஷ் ஆதித்யன், இ.தீனதயாளன் ஆகியோரும், சீனியர் இரட்டையர் மாணவிகள் பிரிவில் சுஜா, ஹேமஸ்ரீ ஆகியோரும், சீனியர் ஒற்றையர் பிரிவில் மோனிஷ் ஆதித்யனும், சூப்பர் சீனியர் இரட்டையர் பிரிவில் கார்த்தி, கோகுல்ராஜ் ஆகியோரும் முதலிடம் பிடித்தனர்.
    பீச் வாலிபால் போட்டி: இதேபோல, கடந்த 4-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டிகளில் ஜூனியர் பிரிவில் அருண்பிரசாத், மணியரசு ஆகியோரும், சீனியர் பிரிவில் கண்ணன், பாலாஜி ஆகியோரும் முதலிடம் பிடித்தனர்.
    கைப்பந்துப் போட்டி: கடந்த 6-ஆம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு போட்டிகளில் மெய்யூர் ஸ்கை பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
    அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
    விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் சேகர், ஞானம், மணிகண்டன் ஆகியோரை பள்ளித் தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் நீலாவதி, செயலர் வரலட்சுமி, இணைச் செயலர் விஸ்வநாதன், பொருளாளர் சாந்தி ரமேஷ், முதல்வர் மு.மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai