Enable Javscript for better performance
ரமணாஸ்ரமத்தில் நவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    இந்த ஆஸ்ரமத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்து வருகிறார். அதன்படி, வெள்ளிக்கிழமை சேஷசயண அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
    சனிக்கிழமை (அக்.8) வேணுகான அலங்காரத்திலும், 9-ஆம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 10-ஆம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளிக்கிறார். அக்டோபர் 11-ஆம் தேதி யோகாம்பிகை அன்னையை கர்பகிரகத்துக்குள் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
    இத்துடன், ரமணாஸ்ரம நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai