Enable Javscript for better performance
ரூ.17 லட்சம் மோசடி: கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூ.17 லட்சம் மோசடி: கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கைது

    By DIN  |   Published on : 08th October 2016 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி அருகே கூட்டுறவு சங்கத்தில்
    ரூ.17 லட்சம் மோசடியில் ஈடுபட்ட, சங்கத்தின் முன்னாள் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.
    ஆரணியை அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (45). இவர், அதே பகுதியின் அதிமுக கிளைச் செயலராக இருந்து வருகிறார். 2011 முதல் 2016 வரையில் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் இருந்தார்.
    இவர், 2013-ம் ஆண்டு விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்தும், போலி நகைகளை அடமானம் வைத்தும்
    ரூ.17 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டாராம். 2015-ல் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இந்த மோசடி தெரியவந்தது.
    இதையடுத்து, செய்யாறு சரக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சரவணன், அண்மையில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.
    இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சங்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஏழுமலையை கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியில் இருந்து நீக்கினர்.
    இந்நிலையில், போலீஸாரின் விசாரணையில் ரூ.17 லட்சம் வரை ஏழுமலை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, வியாழக்கிழமை இரவு ஏழுமலையை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai