Enable Javscript for better performance
வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு வட்டார வள மையம் சார்பில் மண்டல அளவிலான கையெழுத்து மற்றும் ஓவியத்திறன் மேம்படுத்துதல் குறித்து ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உதவித் திட்ட அலுவலர் பி.சுப்பிரமணியன் ஆலோசனையின்பேரில், செய்யாறு வட்டார வள மையத்தில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.சீனுவாசன் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார்.
    இந்தப் பயிற்சியின்போது 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கையெழுத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படைப் பயிற்சிகள், செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தின் எழுத்துக்களை எழுதி ஊக்குவித்தல் மற்றும் ஓவியத்திறன் மூலம் உயிர் எழுத்துக்களை அறிமுகம் செய்தல், ஓவியம் வரைதலில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல், தொடக்க நிலை மாணவர்களுக்கு தசைப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி அளித்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்யாறு ஒன்றியத்தில் சி.ரேவதி, சி.பிரியா, அனக்காவூர் ஒன்றியத்தில் முகம்மது கௌஸ் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் ஏ.ரேவதி மற்றும் வள மையத்தினர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai