Enable Javscript for better performance
விளக்கு ஏற்றியபோது தீயில் கருகி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் அருகே மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றியபோது, ஏற்பட்ட தீயில் பலத்த காயமடைந்த இளம்பெண், சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
    வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமம், மண்டித் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அஸ்மத்தீன். இவரது மனைவி வகிதா (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    இவர்களது வீட்டில் வியாழக்கிழமை இரவு மின்சாரம் தடைபட்டதாம். எனவே, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கை வகிதா ஏற்றியபோது, எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்ததாம். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது.
    அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் வகிதாவை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வகிதா, அங்கு வெள்ளிக்கிழமை காலை இறந்தார். இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai