Enable Javscript for better performance
வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவனம் நடத்திய வளாகத் தேர்வில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெற்ற அருணை காலேஜ் ஆப் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    தானே இந்தியா என்ற தனியார் நிறுவனம், திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில் அண்மையில் வளாகத் தேர்வை நடத்தியது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன.
    இதில், கல்லூரியின் இறுதியாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் அவினேஷ், அருண்குமார், குரு ஆகியோர் வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், இயக்குநர் பொன்.முத்து ஆகியோர் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai