Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம்: 152 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் புதூர், போளூரை அடுத்த பால்வார்த்துவென்றான், திருவண்ணாமலையை அடுத்த கிளியாப்பட்டு ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 152 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் புதூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் பக்கிரிபாளையம், பக்கிரிபாளையம் புதூர், மேல்செங்கம் புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 140 மனுக்களை அளித்தனர்.
    பின்னர், தகுதிவாய்ந்த 90 மனுக்கள் மீது வருவாய்த் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்கம் ஒன்றியக்குழுத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் காமராஜ், பாய்ச்சல் கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரேணுகா வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வணிகவரித் துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.மதியழகன் கலந்துகொண்டு, 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். மகரிஷி மனோகரன், கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர், பக்கிரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல்சர்தார், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    பால்வார்த்துவென்றான்: போளூரை அடுத்த பால்வார்த்துவென்றான் ஊராட்சியில் நடைபெற்ற அம்மா திட்டம் முகாமுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 31 மனுக்களை பெற்றார்.
    இதில் 15 பேருக்கு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ததற்கான சான்று அளிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சாண்டி, வட்ட வழங்கல் அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் கோபால் வரவேற்றார். மண்டல துணை வட்டாட்சியர் வைதேகி, ஆதிதிராவிடர் நல வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர் சுதா மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    கிளியாப்பட்டு: திருவண்ணாமலையை அடுத்த கிளியாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சரஸ்வதி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் அமுல் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார். திருவண்ணாமலை வட்டாட்சியர் சி.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
    முகாமில் பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 145 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 47 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்தல், பெயர் நீக்கல், பட்டா மாற்றுதல் உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராம நிர்வாக அலுவலர் திருமலை, வருவாய்த் துறை அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai