Enable Javscript for better performance
அரசுப் பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    போளூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    போளூரை அடுத்த சந்தவாசல், படவேடு, கேளூர் ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு சரியான அளவில் வழங்கப்படுகிறதா, முட்டை அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கிறதா என்பது குறித்தும், முட்டை சரியான அளவில் வேகவைக்கப்படுகிறதா எனவும், மாணவர்களுக்கான கழிவறை பராமரிப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை குறித்தும், மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு அவர்களின் கல்வித்தரம் குறித்தும் ஆட்சியர் மு.வடநேரே ஆய்வு மேற்கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், சோமசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai