Enable Javscript for better performance
உதவித்தொகை பெற்றுத்தருவதாக மூதாட்டியிடம் நகைத் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    உதவித்தொகை பெற்றுத்தருவதாக மூதாட்டியிடம் நகைத் திருட்டு

    By DIN  |   Published on : 15th October 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியில் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி மூதாட்டியிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் திருடிச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    வந்தவாசி கெஜலட்சுமி நகர் அகிலாண்டேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் புஷ்பவதி (70). இவர், காய்கறி வாங்குவதற்காக வெள்ளிக்கிழமை தேரடி பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, இவரை அணுகிய மர்ம நபர் ஒருவர் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி புஷ்பவதியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
    மேலும், தங்கநகை அணிந்திருந்தால் உதவித்தொகை வழங்க மாட்டார்கள் என்றும், எனவே கழுத்தில் அணிந்துள்ள தங்கச் சங்கிலியை கழற்றி தரும்படியும் அந்த மர்ம நபர் கூறினாராம். இதனால் புஷ்பவதி தனது கழுத்திலிருந்த 3 பவுன் சங்கிலியை கழற்றி அவரிடம் கொடுத்துள்ளார்.
    இதையடுத்து, அந்த மர்மநபர் தங்கச் சங்கிலியை ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலமாக மடித்து புஷ்பவதியிடம் கொடுத்துள்ளார். மேலும், பழைய பேருந்து நிலையம் அருகில் அதிகாரி நிற்பதாகவும், அவரிடம் சென்று பேசிவிட்டு வரும்வரை காத்திருக்கும்படியும் கூறிவிட்டு அந்த மர்ம நபர் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து புஷ்பவதி அந்த காகித பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் ஒன்றும் இல்லை. அப்போதுதான் அந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றது புஷ்பவதிக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai