Enable Javscript for better performance
கறவை மாடு வளர்க்க 19-ல் இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

     திருவண்ணாமலையில் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி முகாமில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று கால்நடை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். பயிற்சி முகாமில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் 04175-206577 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    மேலும், விவரங்களுக்கு இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பைபாஸ் ரோடு, திருவண்ணாமலை என்ற முகவரியில் அணுகலாம் என்று தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், இணைப் பேராசிரியருமான சா.தியோபிலஸ் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai