Enable Javscript for better performance
சாராயம் விற்பனை: 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாராயம் விற்றதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    வேட்டவலம், கல்லாய்சொரத்தூர், செல்லங்குப்பம், மதுராம்பட்டு, பசுங்கரை கிராமங்களில் கடந்த சில நாள்களாக வேட்டவலம் போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, வேட்டவலம், அண்ணா நகரைச் சேர்ந்த சையத் ஆபீஸ் மனைவி மும்தாஜ் பீ (63), தனது வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றபோது கைது செய்யப்பட்டார்.
    வேட்டவலத்தை அடுத்த கல்லாய்சொரத்தூர் கிராமத்தில் வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து சில்லரையில் விற்றதாக நாராயணன் மகன் கணேசன் (72), இதே ஊரைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ராமலிங்கம் (73), செல்லங்குப்பம், புதுக்காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் சித்தா ரங்கநாதன் (55) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
    இதேபோல, பசுங்கரை கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் (55), மதுராம்பட்டு கிராமம் அயோத்தி (71) உள்பட மொத்தம் 6 பேர் சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஏராளமான மதுபான பாட்டில்கள், கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai