Enable Javscript for better performance
செங்கம் நகரில் அக்.20இல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் நகரில் வரும் 20, 21-ஆம் தேதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சாலை குறுகிய நிலையில் உள்ளது. இதனால் செங்கம் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    எனவே, செங்கம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் செங்கம் வருவாய்த் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் காமராஜ் தலைமையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, வரும் 20, 21-ஆம் தேதிகளில் செங்கம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai